This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, 16 February 2016

"ப்ரொஜெக்ட் லூன்" பலூன் இலங்கை வானுக்கு செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய அதிவேக இணைய இணைப்பை வழங்கக்கூடிய "ப்ரொஜெக்ட் லூன்" என அழைக்கப்படும் கூகுளின் பலூன் இலங்கை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மடவளைநியூஸ் இணைய தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு. Project Loon" என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நேற்று திங்கள் இலங்கையில் ஆரம்பித்துள்ளது . இப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக இன்று காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது . இது அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டு ள்ளது. நாடெங்கிலும் மலிவான விலையில் இன்டர்நெட் சேவையின் விஸ்தரிப்பு இதனூடாக எதிர்பார்க்கபடுகிறது விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே இந்த பலூன்கள் நிலை கொண்டிருக்கும் . மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வாழ்தகவுடையன . 20 மில்லியன் சனத்தொகையை உடைய இலங்கையில் 3.3 மில்லியன் நடமாடும் இன்டர்நெட் தொடர்புகளும், 630,000 நிலையான சந்தா தொடர்புகளும் உள்ளன ! 1989 ஆம் ஆண்டு கையடக்க தொலை பேசியை தெற்காசியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும் .அதே போல் 2004 ஆம் ஆண்டு 3G தொழிநுட்பத்தையும் 2014 ஆம் ஆண்டு 4G தொழிநுட்பத்தையும் இப் பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கை அறிமுகப்படுத்தியது .

Monday, 15 February 2016

500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம். புதுடெல்லி, பிப். 15- ஒரு காலத்தில் காஸ்ட்லியான பொருட்களின் பட்டியலில் இருந்த ஸ்மார்ட்போன்கள், இன்று அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக உள்ளதால், சாமான்ய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்த குறையைப் போக்கி அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு போனை தயாரித்துள்ளது ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம். ப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனின் விலை வெறும் 500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கொண்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படும் ப்ரீடம் 251, வரும் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்திய அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனைப் பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியீட்டு நாள் அன்று தான் அறிவிக்கப்படும் என்று ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.