Monday, 15 February 2016
Home »
» 500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்: புதன்கிழமை வெளியிடுகிறது இந்திய நிறுவனம்.
புதுடெல்லி, பிப். 15-
ஒரு காலத்தில் காஸ்ட்லியான பொருட்களின் பட்டியலில் இருந்த ஸ்மார்ட்போன்கள், இன்று அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.
தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக உள்ளதால், சாமான்ய மக்களால் வாங்க முடிவதில்லை. இந்த குறையைப் போக்கி அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வகையில் குறைந்த விலையில் ஒரு போனை தயாரித்துள்ளது ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம். ப்ரீடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த போனின் விலை வெறும் 500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கொண்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்படும் ப்ரீடம் 251, வரும் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்திய அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனைப் பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியீட்டு நாள் அன்று தான் அறிவிக்கப்படும் என்று ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment