சீனாவின் மிக பெரிய இணைய மின்னணு வாணிகதளமான அலிபாபா நேற்றைய தினம்
“Privacy Knight” என்ற செயலியை அறிமுகபடுத்தியுள்ளது. இது இந்தியாவின்
முதல் இலவச face-lock செயலி ஆகும். இதன் மூலம் ஸ்மார்ட் போன் பயனர்கள்
தங்களது போனின் பாஸ்வேர்டாக அவர்களது செல்பி புகைப்படங்களை செட் செய்து
கொள்ளலாம். கை ரேகை லாக்கினைத் தொடர்ந்து “Face lock ” செயலி மிகப் பெரிய
பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. சாதரணமாக பயனர்கள் ஆன்றாய்டு போனில்
லாக் செய்வதற்கு பின் நம்பர் அல்லது பாஸ்வேர்டினை உபயோகிப்பது வழக்கமான
முறையாகும். பெரும்பாலும் சில சமயங்களில் நமக்கே பின் நம்பர்களும்
பாஸ்வேர்டுகளும் மறந்துவிடும் நிலை ஏற்படலாம். மேலும் அவையனைத்தும்
மற்றவர்களால் எளிதில் கண்டறியப்பட்டு அவற்றை அவர்கள் தவறான வழிகளில்
உபயோகிக்க வாய்ப்புகள் உள்ளன. face-lock செயலி மூலமாக மக்கள் ஒருமுறை
தங்கள் செல்பி புகைப்படங்களை தேர்ந்தெடுத்தால் போதும். இது மிகவும்
எளிதானதும் கூட…!
மேலும் இந்த நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் கையில் இல்லாதவர்களை காண்பதே
அரிது!! அவற்றுள் பலர் பாஸ்வேர்ட் மற்றும் பேட்டர்ன் , பின் நம்பர்
போன்றவற்றை பயன்படுத்துவதை சிரமம் எனக் கருதினால் அதுபோன்றவர்களுக்கு இவை
உபயோகிக்க சிறந்ததாக அமையும். இதில் பேஸ் டிடெக்சன் 100 சதவிகிதம்
துல்லியத் தன்மை வாய்ந்தது. DOWNLOAD NOW Privacy Applock-Privacy Knight
0 comments:
Post a Comment