Friday, 29 July 2016

ஆன்லைனில் கோப்புகளை கான்வெர்ட் செய்ய வேண்டுமா?

                   ​ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய பல்வேறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கிறன. ஆன்லைனிலும் நூற்றுகணக்கான இணையதளங்கள் கோப்பினை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியினை வழங்கி வருகிறன. இருப்பினும் உடனடியாக சில கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதி பல இணையதளங்களில் தேடினாலும் கிடைப்பது அரிது.

                   மேலும் gif கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றுவதற்கு மென்பொருள்களோ , ஆன்லைன் கன்வெர்ட் வசதி கொண்ட இணையதளங்களோ கிடைப்பது மிகவும் அரிதான செயல். இப்படி அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட கோப்புகளை கன்வெர்ட் செய்யும் இணையதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிதாக கோப்புகளை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

                         Cloud convert

               தளத்திற்கு சென்று கன்வெர்ட் செய்ய வேண்டிய பைல்களை எல்லாம் தேர்வு செய்யவும் பின் எந்த பார்மெட்டில் கன்வெர்ட் செய்யப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யவும். அடுத்து Start Conversion என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்புகள் அனைத்தும் கன்வெர்ட் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

0 comments:

Post a Comment